தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kedarnath Temple Controversy: தங்கம் என கூறி பித்தளை ஒட்டிய விவகாரம் - கேதார்நாத் கோயிலில் ரூ. 125 கோடி மோசடி

Kedarnath Temple Controversy: தங்கம் என கூறி பித்தளை ஒட்டிய விவகாரம் - கேதார்நாத் கோயிலில் ரூ. 125 கோடி மோசடி

Jun 20, 2023, 07:31 PM IST

  • கேதர்நாத் கோயின் கருவறையில் தங்க முலாம் பூசப்பட்டதாக கூறி பித்தளையில் பூசப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ரூ. 125 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக கோயில் மூத்த அர்ச்சகர் தெரிவித்துள்ளார். ஆனால இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், இதுதொடர்பாக அவதூறு பரப்பும் விடியோக்களை வெளியிடுவோர், தவறான தகவல்களை பரப்புவோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் தங்கம் என சொல்லி கருவறை சுவற்றில் பித்தளை பதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக விடியோக்கள் வெளியாகி வைரலாகின. இதன் பின்னர் கோயிலை சேர்ந்த மூத்த அர்ச்சகரும் ஊழல் நடந்திருப்பதாக வாய் திறந்துள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் கோயிலின் புனிதத்தை கெடுக்கும் விதமாக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலுக்கு வருகை புரியும் பகதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதை பொறுக்க முடியாமல் சிலர் இவ்வாறு தவறான செய்திகளை பரப்புவதாக கோயில் நிர்வாக கமிட்டி தலைவர் அஜேந்திரா அஜய் தெரிவித்துள்ளார். அத்துடன் கோயிலுக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்ட பணத்தை வைத்து, இந்திய தொல்லிய துறையினரின் மேற்பார்வையில் இந்த பணிகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் எங்களது தனிப்பட்ட பணிகள் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.கேதார்நாத் கோயிலுக்கு தங்கம் தானமான வழங்கிய நபர்தான் பத்ரிநாத் கோயிலுக்கும் தங்கம் வழங்கியதாகவும், 2005ஆம் ஆண்டில் அந்த கோயிலின் கருவறை சுவற்றில் ஒட்டப்பட்டது.