Karnataka: பைக்கில் ட்ரிபிள்ஸ்..மைனர்களை மடக்கிய பெண் போலீஸ்! கண்டிப்புடன், கருணை - குவியும் பாராட்டு
Jul 27, 2024, 09:15 PM IST
- கர்நாடகா மாநிலம் பாகல்கோட் அருகே வழக்கமான தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தபோது பைக்கிள் ட்ரிபிளிஸ் வந்த மைனர் மாணவர்களை பெண் சப்இன்ஸ்பெக்டர் எஸ். ஆர். நாயக் மடக்கி பிடித்தார் . விதிமுறை மீறியதற்காக மாணவர்களுக்கு அபராதம் விதித்தார். அப்போது அந்த மாணவர்களின் ஒருவர் போலீஸிடம், கல்லூரி கட்டணமாக செலுத்த வைத்திருந்த பணத்தை அபராதமாக செலுத்தியது தெரிந்தால் வீட்டில் திட்டுவார்கள் என கெஞ்சி கேட்டுள்ளார். மாணவனின் அந்த அவல நிலையை புரிந்து கொண்ட பெண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர், அவரை தாயுள்ளத்துடன் கட்டியணைத்து அறிவுரை வழங்கி விடுவித்தார். அத்துடன் பெற்றோர்கள் தங்களது மைனர் பிள்ளைகளுக்கு வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்தார். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.