Video: 90 ஆண்டு பழமையான 800 மீ ரயில்வே பாலம் வெள்ள நீரால் இடிந்து விழுந்தது
Aug 20, 2022, 06:17 PM IST
கடந்த 1928ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரயில்வே பாலம் ஒன்று கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இடிந்து விழுந்தது. ஹிமாச்சல பிரதேசம், கங்கரா மாவட்டத்தில் சக்கி ஆறு உள்ளது. இந்த ஆறு ஹிமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் எல்லையில் அமைந்துள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 800 மீட்டர் நீளமான பாலம் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளித்தால் இடிந்து விழுந்தது. 90 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த இந்த பாலத்தின் 3 இரும்பு கிரின்டர் மற்றும் ஒரு கான்கிரீட் பாலம் 2 முதல் 3 விநாடிகலில் இடிந்து விழும் விடியோ வெளியாகியுள்ளது. நாரோ கேஜ் எனப்படும் குறுகிய ரயில் பாதையான இதில் பற்சக்கரங்களுடன் கூடிய ரயில்கள் செல்லும். இந்த பாலம் பதான்கோட், ஜோஹிந்தர் நகர் பகுதியை இணைப்பதாக அமைந்துள்ளது. தற்போது பாலம் உடைந்துவிட்ட நிலையில் இந்தப் பகுதிக்கு இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மிகவும் பழமையான பாலமான இதில் கடந்த மாதம் விரிசல் ஏறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் தர்மசாலாவில் பல்வேறு பகுதிகளில் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் கங்கரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மெளர், மண்டி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை 5 மூடப்பட்டுள்ளது. அதேபோல் சம்பா என்ற பகுதியில், நிலச்சரிவு காரணமாக வீடு ஒன்று சரிந்து விழுந்த நிலையில் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் ஆற்றங்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறு்த்தப்பட்டுள்ளது.