Iran Police Killed: தீவிரவாத தாக்குதலில் 11 போலீசார் சுட்டுக்கொலை! ஈரானில் நடந்த கொடூர சம்பவம்
Dec 15, 2023, 08:41 PM IST
- ஈரான் நாட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் சிஸ்தான் - பாலுசிஸ்தான் மாகணத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் 11 போலீசாரை சுட்டு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் மற்றும் தீவிரவாதிகள் என இரு தரப்பினிரடையேயும் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் ஒரு சில தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுமார் 7 போலீசார் வரை கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸார், தீவிவாதிகள் இடையிலான துப்பாக்கி சூடு தொடர்பான பல விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஒரு விடியோவில் ஹெலிகாப்டரில் தீவிரவாதிகள் உலா வரும் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. சமீபத்தில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லை பகுதியில் நிகழ்ந்த மிகவும் கொடூரமான தாக்குதலாக இது அமைந்துள்ளது. சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்த ஜெயிஷ்-அல்-அதல் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். 2012இல் ஜெயிஷ்-அல்-அதல் இயக்கம் உருவாக்கப்பட்டது. ஈரான் அரசாங்கம் இந்த இயக்கத்துக்கு தடை விதித்தது. சிஸ்தான் - பாலுசிஸ்தான் பகுதியின் மக்கள் ஏழ்மை காரணமாக போதைப்பொருள் கடத்தல், கிளர்ச்சி, சன்னி தீவிரவாதிகளாக உருவெடுத்துள்ளனர். கடந்த ஜூலை 23ஆம் தேதி இதுபோன்ற தாக்குதலில் ரோந்த பணியில் இருந்த காவலர் கொலை செய்யப்பட்டார். இரண்டு போலீசார், நான்கு தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் மேற்கூறிய தாக்குதல் நடந்துள்ளது. இதேபோல் கடந்த மே மாதம் தீவிரவாதிகளுடனான மோதலில் ஈரான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.