ISRO Satellite Launch: விண்ணில் செலுத்தப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைகோள்! 17 நிமிடத்தில் சுற்றுப்பாதையை அடைந்தது
Aug 17, 2024, 06:30 PM IST
- ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுகலத்தில் இருந்து இஸ்ரோ புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-8இன் ஏவுதல் வெற்றிகரமாக முடிந்தது. 175 கிலோ எடையுள்ள EOS-08 செயற்கைக்கோள் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. பேரிடர் மேலாண்மை குறித்த தகவல்களை வழங்க இந்த செயற்கைக்கோள் பயனுள்ளதாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழலுடன், பேரழிவுகள் மற்றும் எரிமலைகளை கண்காணிக்கும் எனவும், இந்த சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோமநாத் வாழ்த்து தெரிவித்தார். சுமார் 17 நிமிடங்களில் செயற்கைக்கோள் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது