Israel Police Attack: காசா பகுதியில் தீவிரவாதிகள் சேஸ் செய்து சுட்டு கொன்ற இஸ்ரேல் போலீஸ் - பரபரப்பான விடியோ
Oct 10, 2023, 08:12 PM IST
- காசா நகரின் அருகே தெற்கு இஸ்ரேலில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் இஸ்ரேல் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் கேமராவில் படபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த போலீசார் காரில் இருந்த தீவிரவாதிகளை துரத்தி பிடித்து, காரை தீவைத்த நிலையில் அதிலிருந்த இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் சென்ற காரை பைக் மற்றும் காரில் சேஸ் செய்த போலீஸார் துப்பாக்கியால் சுட்டு தள்ளிய காட்சிகள் இதில் இடம்பிடித்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே உச்சக்கட்ட போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த பரபரப்பான காட்சியை இஸ்ரேல் போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த காரில் போலீசார் தாக்கியபோது பதில் தாக்குதல் நிகழ்த்தப்படவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்திய பிறகு, போலீசார் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் நடைபெற்று வரும் தாக்குதலில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். அதே போல் கடந்த 3 நாள்கலில் இஸ்ரேல் தரப்பிலிருந்து காசா பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.