தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Isis Terorist Killed: இரண்டு சுவீடன் நாட்டினரை கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை - பரபரப்பு விடியோ

ISIS Terorist Killed: இரண்டு சுவீடன் நாட்டினரை கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை - பரபரப்பு விடியோ

Oct 18, 2023, 07:47 PM IST

  • பெல்ஜியம் நாட்டிலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகரில் சுவீடன் நாட்டை சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த நபர் கூறி, அதற்கு பொறுப்பேற்று பேசும் விடியோவும் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுட்டு கொன்றனர். இந்த தாக்குதல் காரணமாக பெல்ஜியம் - சுவீடன் இடையே நடைபெற இருந்த யுரோ 2024 கால்பந்து குவாலிபயர் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த பெல்ஜியம் நாட்டு பிரதமர், இது முற்றிலும் தீவிரவாத செயல் என்று குறிப்பிட்டுள்ளார். சுவீடன் நாட்டை சேர்ந்தவர்கள் மீது தீவரவாதிகள் நடத்திய பரபரப்பான தாக்குதல் விடியோவும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர் விடியோவை பகிர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி தங்களது குறி சுவீடன் நாட்டினர் மீது இருப்பதாக தெரிவித்தார். இதன் பின்னர் தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்து சுட்டு கொன்ற போலீசார் அவரிடமிருந்த ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் கால்பந்து போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். இஸ்லாமிய நாடுகளுக்கும் சுவீடனுக்கும் இடையே நிகழும் சர்ச்சையை தொடர்ந்து இந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்றிருக்ககூடும் என கூறப்படுகிறது.