Spying Charge Against Indians: மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக இந்தியர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு - வெளியான தகவல்
Nov 09, 2023, 11:10 PM IST
- இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இந்திய கப்பல்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகளுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய கப்பல் படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்வதற்கான வழிகள் இந்தியாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் தரப்பில் ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியர்கள் உளவு பார்த்ததாக முன் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இரு நாட்டின் உறவிலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவைக்கு கத்தார் நம்பியே அதிகமாக உள்ளது. சுமார் 50 சதவீதம் வரை தேவைகளை இந்தியா கத்தாரிடமிருந்தே பூர்த்தி செய்து வருகிறது.