தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Barak-8 Missile: இந்திய டெஸ்ட்ராயர் கப்பல் மோர்முகாவோ வைத்து பராக் 8 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

Barak-8 missile: இந்திய டெஸ்ட்ராயர் கப்பல் மோர்முகாவோ வைத்து பராக் 8 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

May 23, 2023, 09:30 PM IST

  • இந்திய கடற்படையின் உள்நாட்டு அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் மோர்முகாவோவில் வைத்து இலக்கை நோக்கி  கடலில் சறுக்கி சூப்பர்சோனிக் தாக்குதல் நிகழ்த்தும் ஏவுகணையான பராக்-8 MR-SAM பரிசோதனை நிகழ்த்தப்பட்டது. கடந்த 14ஆம் தேதி இந்த பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை ஐஎன்எஸ் மோர்முகாவோவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இது ஒரு தனித்துவமான மைல்கல் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த சோதனைக்கு பின்னர் ஐஎன்எஸ் மோர்முகாவோ சூப்பர்சோனிக் இலக்கு வெற்றிகரமாக உள்வாங்கப்பட்டது. புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் அழிப்பு கப்பலில், பராக் 8 எம்ஆர் சாம் என்கிற சாதனம் பரிசோதனை செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் ஏவுகணைகளை தாங்கும் கப்பலாக மோர்முகாவோ உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் விசாகபட்டினத்தில் இணைக்கப்பட்ட இந்தியாவின் டெஸ்ட்ராயர் கப்பல்களில் இரண்டாவதாக இது உள்ளது.