Indian Navy: கடத்தப்பட்ட கப்பலை மீட்க கடற்படை வீரர்களை அனுப்பிய இந்திய கடற்படை
Dec 16, 2023, 08:02 PM IST
- இந்தியாவை சேர்ந்த வணிக கப்பல் ஒன்று கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட நிலையில், அதை மீட்பதற்காக இரண்டு போரக்கப்பல், ரோந்த விமானம் அனுப்பபட்டிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. மால்டா வெசல் ரக கப்பலான அதன் பெயர் எம்வி ருயன் ஆகும். கடந்த 14ஆம் தேதி இந்த கப்பல் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட கப்பலின் புகைப்படம் இந்திய கடற்படை விமானம் டிசம்பர் 16ஆம் தேதி புகைப்படம் எடுத்துள்ளது. காணாமல் போன கப்பலுக்கான தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் அதை மீட்பதற்காக கடற்படை வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட கப்பலில் 18 பேர் இருப்பதாகவும், அந்த கப்பல்யேமன் அருகே சோமலியாவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. யேமனை சேர்ந்த ஹெளத்தி குழு, செங்கடல் பரப்பில் பல்வேறு கப்பல்களை டார்கெட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் - காசா போர் காரணமாக செகடல் பரப்பில் இருக்கும் கப்பல்கள் மீது யேமன் நாடு ஒரு கண் வைத்திருப்பதாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.