தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Indian Navy Passenger Drone: இந்திய கடற்படையின் முதல் பயணிகள் ட்ரோன் வருணா

Indian Navy passenger drone: இந்திய கடற்படையின் முதல் பயணிகள் ட்ரோன் வருணா

Oct 05, 2022, 11:58 PM IST

இந்திய கடற்படையின் ஆற்றலை அதிகரிக்கும் விதமாக நாட்டின் முதன் பயணிகள் ட்ரோன் சேவையை விரைவில் இணைக்கவுள்ளது. மனிதர்கள் பயணிக்கும் இந்த ட்ரோன்களுக்கு வருணா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதையில் இருந்து வரும் இந்த ட்ரோன்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இந்த கடற்படையின் தேவையை மனதில் கொண்டு புணேவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று இந்த ட்ரோன்களை உருவாக்கி மேம்படுத்தியுள்ளது. போரின்போது இதன் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்திய கடற்படை இலச்சினையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன்கள் 130 கிலோ எடை வரை தாங்கும் வலிமையையும், 25 கிலோ மீட்டர் வரை செல்லும் ஆற்றலும் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பைலட்கள் இல்லாத இந்த ட்ரோன்கள் இந்திய கடற்படையின் தேவைகள் பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆட்டோ பைலட் மோட்கள் இந்த ட்ரோன்கள் நீண்ட தூரம் பறக்க உதவுகிறது. அவசரகாலத்தில் இதில் இணைக்கப்பட்டுள்ல பாராசூட் தானாவே திறந்துவிடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏர் அம்புலன்சாகவும், சரக்கு போக்குவரத்துக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். நவீன் காலத்தில் போர் சூழலில் இன்றியமையாத தேவையாக பயன்பாட்டில் இருந்து வரும் ட்ரோன்களில் முதலீடு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் திரளாக ட்ரோன்கள் வாங்குவதற்கு என பாதுகாப்பு துறை அமைச்சகம் ரூ. 700 கோடி வரை நிதியும் ஒதுக்கியது.