Indian Army Jawan Attacked: கேரளாவில் ராணுவ வீரர் PFI உறுப்பினர்கள் தாக்குதல் - போலீஸ் வழக்குப்பதிவு
Sep 26, 2023, 08:45 PM IST
- கேரளா மாநிலம் கொலத்தில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி ராணுவ வீரர் ஒருவரை ஆறு பேரை தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷைன் குமார் என்ற ராணுவ வீரர் கைகள் கட்டப்பட்ட நிலையில், அவரது முதுகில் பிஎஃப்ஐ என்ற ஆங்கில எழுத்துகளை எழுதி தாக்கப்பட்டுள்ளார். பிஎஃப்ஐ என்பது பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பை இந்திய அரசாங்கம் கடந்த ஆண்டில் தடை செய்தது. ராணுவ வீரர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கொல்லம் அருகேயுள்ள கடக்கல் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிஎஃப்ஐ தொடர்பான வழக்குகள் மீது தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர். முன்னாள் பிஎஃப்ஐ உறுப்பினர்கள் மீது அமலாக்க துறையினர் சோதனை நடத்திய நிலையில், ராணுவ வீரர் மீதான தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.