Invisible Road Near China Border: சீனா எல்லையில் கண்ணுக்கு தெரியாத மறைமுக சாலையை அமைக்கும் இந்தியா
Oct 02, 2023, 04:55 PM IST
- Invisible Road Near China Border: சீனா எல்லை அருகே வடக்கு ராணுவ தளத்துக்கு அருகே சாலை அமைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. மறைமுக சாலையான இதன் மூலம் எல்லைப்பகுதி பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த சாலையின் முக்கிய அம்சமாக சீனாவின் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து பார்த்தால் கண்ணுக்கு தெரியாத வண்ணம் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மறைமுக சாலையான இதை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் எனவும் ராணுவத்தினருக்கு தேவையான முக்கியமான அம்சத்தை இந்த சாலை மூலம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தௌலத் பேக் ஓல்டி பகுதியில் இந்த சாலையானது அமையவுள்ளது. அநேகமாக அடுத்த மாதத்துக்குள் இந்த சாலை பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சாலை அமைக்கும் பணிகளை கூட பார்க்க முடியாத அளவில் இந்திய பகுதியில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், தாக்குதலின்போது குறைவான பாதிப்பையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த சாலையானது ஆயதங்களை போக்குவரத்து செய்யவும், ராணுவ வீரர்கள் பயணிக்கவும் பயன்படுத்தப்படவுள்ளது. 2020இல் கல்வான் தாக்குதலுக்கு பின்னர் எல்லைப்பகுதியில் உள்ள கட்டமைப்புகளை மாற்றுவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. எல்லைப்பகுதி சாலை அமைப்பு நிறுவனங்கள் இதுவரை 300 தனித்துவமான சாலைகளை ரூ. 8 ஆயிரம் கோடி செலவில் அமைத்துள்ளது.