தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Khalistan Charge: விஸ்வரூபம் எடுக்கும் காலிஸ்தான் விவகாரம் - கனடாவுக்கான விசா சேவையை நிறுத்திய இந்தியா

Khalistan Charge: விஸ்வரூபம் எடுக்கும் காலிஸ்தான் விவகாரம் - கனடாவுக்கான விசா சேவையை நிறுத்திய இந்தியா

Sep 21, 2023, 11:26 PM IST

  • கனடாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்திய அரசாங்கம் அறிவித்த நிலையில், அந்த நாட்டுக்கான விசா சேவை காலவரையின்றி நிறுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வரும் அச்சுறுத்தல்களை மேற்கோள் காட்டி, இந்தியாவில் உள்ள தூதரக ஊழியர்களை தனது நாடு சரிசெய்து வருவதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறிய நிலையில், இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. காலிஸ்தான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அதுதொடர்பாக கனடா பிரதமர் ட்ரூடோவின் கருத்துக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு மோடி அரசாங்கத்தின் முகவர்களே காரணம் என்று ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால் அங்கிருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக கனடாவுக்கு விசா சேவை வழங்குவதை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் இந்த சேவை நிறுத்தம் பற்றி அதிகாரப்பூர்வமாக இந்திய அரசாங்கம் அறிவிக்கவில்லை. இந்தியாவுக்கான விசா சேவை வழங்கும் தளத்தில் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டிருப்பதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் விசா சேவையானது கனடாவுக்கு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.