தில்லி செங்கோட்டையில் Mi-17 ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்
Aug 15, 2022, 03:00 PM IST
தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றிய போது இந்திய விமானப்படையினர் சார்பில் இரண்டு Mi-17 1V ஹெலிகாப்டரில் மூலம் பறந்து வந்து மலர்தூவி சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்களால் பலத்த கைதட்டல்களும், ஆராவாரமும் எழுப்பப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டில் முதல் முறையாக Mi-17 1V ஹெலிஹாப்டர்கள் மூலம் மலர் தூவி 75வது சுதந்திர தின விழாவுக்கான கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. இந்த பாரம்பரியத்தை பின்பற்றும் விதமாக தற்போது 75வது சுதந்திர தின கொண்டாட்ட நிறைவு விழாவில் மீண்டும் Mi-17 1V ரக ஹெலிகாப்டர்களில் பறந்து வந்து மலர்கள் தூவப்பட்டது. 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக வரையப்பட்டிருந்த படத்தின் மீது மலர்கள் தூவப்பட்டன. இந்திய விமானப்படை சார்பில் 220க்கும் மேற்பட் Mi-17 சீரிஸ் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு விதமான யுக்திகளின் மூலம் அவை பயன்படுத்தப்படுகின்றன. பழைய தலைமுறை Mi-17 ஹெலிகாப்டர் சீரிஸ்கள் தற்போது அப்கிரேடு செய்யப்பட்டு வருகின்றன. மேம்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் பொருத்தப்படுகிறது. ரஷ்யாவை பூர்வீகமாக கொண்ட இந்த ஹெலிஹாப்டர்கள் ஏவுகணை மற்றும் ராக்கெட்டுகளை எடுத்துச் செல்லும்விதமாக வடிவமைக்கப்படுகிறது.