தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Indian Air Force: சாகச நிகழ்ச்சியுடன் இந்திய விமான படைக்கு புதிய கொடி அறிமுகம் - விடியோ

Indian Air Force: சாகச நிகழ்ச்சியுடன் இந்திய விமான படைக்கு புதிய கொடி அறிமுகம் - விடியோ

Oct 09, 2023, 08:25 PM IST

  • உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பாம்ரௌலி விமானப்படை நிலையத்தில் நடைபெற்ற 91வது IAF தின கொண்டாட்டத்தில் இந்திய விமானப்படையின் (IAF) தலைவர், ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் செளதாரி, இந்திய விமானப்படையின் புதிய கொடியை வெளியிட்டார். 72 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய விமான படைக்கு புதிய கொடி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கொடியானது மேல் வலது மூலையில் IAF முகடும், இது மேற்புற இடது பக்கத்தில் தேசிய கொடியும், கீழ் வலதுபுறத்தில் IAF ட்ரை-கலர் ரவுண்டலையும் கொண்டிருக்கிறது. விமான படை வீரர்கள் மற்றும் விமான படை அதிகாரிகள் சிலர் இந்த புதிய கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பு செய்தனர். அதேபோல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான செடாக் விமானம் இந்த புதிய கொடியுடன் பறந்தவாறு அணிவகுப்பு செய்தது. முந்தைய விமானப்படை கொடியில் IAF முகடு இடம்பிடித்ததில்லை. கடந்த ஆண்டில் ஐஎன்எஸ் விக்ராந்த் இணைப்பு நிகழ்வின்போது இந்திய கடற்படை புதிய கொடியை அறிமுகப்படுத்தியது. தற்போது விமான படை சார்பில் புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் விமான படை சார்பில் பல்வேறு சாகச நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.