Hamas Attack: இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலில் ஹமாஸ், பாலஸ்தீன தீவிரவாதிகள் - விடியோ
Oct 14, 2023, 11:21 PM IST
- வடக்கு இஸ்ரேல் பகுதிகளில் பாலஸ்தீனத்தை சேர்ந்த தீவிரவாத குழு இரவில் திடீரென் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள ஹைஃபா நகரில் அடையாளம் தெரியாத இரண்டு பொருள்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் சார்பிலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் புதிய விடியோ வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேலை நோக்கி தீவிரவாதிகள் மோர்டார் மற்றும் ராக்கெட்டுகளை ஏவும் காட்சிகள் விடியோவில் இடம்பிடித்துள்ளன. இதற்கிடையே 24 மணி நேரத்துக்குள் காசாவை விட்டு வெளியேறுமாறு கூறிய இஸ்ரேல் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐநா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு முன்னரே காசா மீது முற்றுகையை செய்தது. மின்சாரம், தண்ணீர் சேவை துண்டிக்கப்பட்டது. இஸ்ரேலின் உத்தரவு காசாவில் வாழ்ந்து வரும் 2.3 மில்லியன் மக்களின் வாழ்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது எனவும், சர்வதேச சட்டத்தை மீறுவதாக இருப்பதாக மனித உரிமை வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.