தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Gyanvapi Mosque Puja: கியான்வாபி மசூதி பாதாள அறையில் நடந்த இந்துக்கள் பூஜை

Gyanvapi Mosque Puja: கியான்வாபி மசூதி பாதாள அறையில் நடந்த இந்துக்கள் பூஜை

Feb 02, 2024, 01:25 PM IST

  • உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே அமைந்திருக்கும் கியான்வாபி மசூதி இந்துக்கள் பூஜை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கியாந்வாபி மசூதி வளாகத்தில் அமைந்திருக்கும் தெற்கு பாதாள அறையில் இந்துக்களால் பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. மசூதியில் பூஜை செய்ய அனுமதி அளித்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் சமூகத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கியான்வாபி மசூதி நிர்வாகம் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டதாக உச்ச நீதிமன்றம் பதிவாளர் முஸ்லீம் அமைப்பிடம் தெரிவித்துள்ளது. கியான் வாபி சம்பவத்தால் வாரணாசியில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே அதிகாலை 3.30 மணியளவில் முதல் பூஜையானது நடைபெற்றது. இதில் பூசாரிகள், சில அதிகாரிகள் மட்டும் பங்கேற்றனர்.