Dwarka Expressway: இந்தியாவின் முதல் 8 வழி எக்ஸ்பிரஸ் சாலை அறிமுக விடியோ - விடியோவை பகிர்ந்த அமைச்சர் நிதின் கட்காரி
Aug 22, 2023, 05:32 PM IST
- புதிதாக அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர இருக்கும் துவாரகா எக்ஸ்பிரஸ் சாலையின் அறிமுக விடியோவை மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பகிர்ந்துள்ளார். ரூ. 9 ஆயிரம் கோடி செலவில் ஒற்றை தூண்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த சாலை ஹரியானா மாநிலத்தில் 18.9 கிலோ மீட்டர், தேசிய தலைநகர் பகுதியில் 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு வழி சாலையாக இருக்கும் இதனை இந்திய பொறியியல் துறையின் அற்புதம் என்று கூறப்படுகிறது. 29 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலை இந்தியாவின் முதல் பறக்கும் சாலையாக உள்ளது. 34 மீட்டர் அகலம் கொண்ட சாலையில் இணைப்பு மேம்பாலங்கள், குகைகள், சப்வே, மேம்பாலங்கள் ஆகியவற்றின் வழியே மற்ற சாலைகளுக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சாலையின் இரு புறமும் 3 பாதைகள் கொண்ட சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு மொத்த சாலையும் ஐடிஎஸ் (இண்டலிஜெண்ட் போக்குவரத்து அமைப்பு) எனப்படும் தொழில்நுட்ப வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா காண்பதற்கு முன்னரே இந்த சாலை குறித்து சர்ச்சையும் எழுந்துள்ளது. சிஏஜி தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின் படி ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கான செலவு ரூ.18.2 கோடியில் இருந்து ரூ. 251 கோடி என உயர்ந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவையில் கடந்த 75 ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் மிக பெரிய ஊழல் என ஆம் ஆத்மி கட்சி இதுதொடர்பாக விமர்சனம் முன் வைத்துள்ளது.க