தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Telangana: கட்டிடம் கட்ட அனுமதியில்லை..கண்டெய்னரை பள்ளியாக மாற்றிய அமைச்சர் - தெலங்கானாவில் நடந்த சம்பவம்

Telangana: கட்டிடம் கட்ட அனுமதியில்லை..கண்டெய்னரை பள்ளியாக மாற்றிய அமைச்சர் - தெலங்கானாவில் நடந்த சம்பவம்

Sep 18, 2024, 06:50 PM IST

  • தெலங்கானா மாவட்டம் முலுகு மாவட்டத்தில் முதல் கண்டெய்னர் பள்ளி நிறுவப்பட்டுள்ளது. இது கன்னைகுடேம் மண்டலத்தின் பங்காருபள்ளி கோத்திகோயா குழு வனப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்த பள்ளிகள் சிதிலமடைந்துள்ளது. இங்கு நிரந்தர கட்டடங்களுக்கு வனத்துறை அனுமதி வழங்குவதில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் குடிசைகளில் தங்கி படித்து வருகின்றனர். ஆனால், மழைக்காலம் வரும்போது மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிட்டது. இதையடுத்து, அமைச்சர் சீதாக்கா முயற்சியால், கண்டெய்னர் ஒன்று பள்ளியாக மாற்றப்பட்டது. இதற்காக ரூ. 13 லட்சம் நிதியில் செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.