Coimbatore: எடப்பாடியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு- முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி குற்றச்சாட்டு!
Apr 16, 2024, 01:43 PM IST
Coimbatore: கேவையில் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவில் 50 ஆண்டு காலம் பணியாற்றினேன், 2 முறை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ வாக இருந்தேன். கடந்த தேர்தலில் போது எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வாய்ப்பு கொடுக்கப்பட்ட பி.ஆர்.ஜி.அருண்குமார் தனக்கு பணியாற்றுமாறு கோரினார். நானும் வேலை செய்தேன், ஆனால் கட்சி தலைமையில் இருந்து கண்டுகொள்ளவில்லை ஓரம் கட்டினார்கள். பிறகு செந்தில் பாலாஜி திமுகவிற்கு அழைத்தார். மரியாதை இல்லாத கட்சியில் இருக்க வேண்டாம் என நினைத்து அதிமுகவில் இருந்து விலகினேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை திமுகவில் இணைந்தேன். அதிமுக இயக்கம் உடைந்த போது, ஒ.பி.எஸ். அணியில் இருந்தேன். அப்போது அவர்கள் கூவத்தூரில் இருந்தார்கள். 1986 ல் இருந்து பணியாற்றிய என்னை ஒதுக்கினார்கள். துரோகத்தின் எல்லை எடப்பாடி பழனிச்சாமி தான். அதிமுக அழிவு பாதையில் சென்று கொண்டுள்ளது. உதயகுமாரில் இருந்து அனைவரும் சசிகலா காலில் விழுந்து அமைச்சர்களாக வந்தவர்கள் தான் அனைவரும். இல்லை என சத்தியம் போட முடியுமா? நான் வார்டு உறுப்பினர், சேர்மனாக இருந்து பல்வேறு பணியாற்றியதால் மக்கள் ஆதரவளித்தனர். தற்போது பிரச்சாரத்திற்கு செல்லும் போது முதல்வர் திட்டத்தால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனைக்கட்டியில் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைப்பதாக கூறினார்கள். ஆனைக்கட்டியில் இருந்து கோவைக்கு பணிக்கு வரும் பெண்கள் பேருந்துக்கு தினமும் 50 ரூபாய் செலவழித்து வந்தனர். இப்போது இலவச பேருந்தால் அந்த பிரச்சனை இல்லை என கூறுகின்றனர். இதுபோன்ற திட்டங்களால் நல்ல வரவேற்பு உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோகி. அவரது சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு தான் என கடுமையாக விமர்சித்துள்ளார்.