தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Bomb Threat: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. டெல்லியில் பெரும் பரபரப்பு!

Bomb Threat: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. டெல்லியில் பெரும் பரபரப்பு!

May 01, 2024, 06:05 PM IST

  • டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள 80-க்கும் அதிகமான பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக புதன்கிழமை காலையில் மின்னஞ்சலில் மூலம் மிரட்டல் வந்திருந்தது. இதனைத்தொடர்ந்து பள்ளிகளில் இருந்து விரைவாக மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்தப் பள்ளிகளில் டெல்லி போலீஸார் விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். பள்ளி வளாகங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.