Delhi Robbery: பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ. 2 லட்சம் கொள்ளை - வைரல் சிசிடிவி காட்சி
Jun 27, 2023, 03:41 PM IST
- டெல்லியில் பட்டப்பகலில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் பிரகதி மைதான் சுரங்க பாதை பகுதியில் கத்தி முனையில் பணத்தை கொள்ளையடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 24ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில் இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. தொழிலதிபர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை நான்கு பேர் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்து துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களிமிருந்த பண பையை பறித்து பறந்து சென்றுள்ளனர். கொள்ளையர்கள் பறித்து சென்ற பையில் ரூ. 2 லட்சம் பணம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இரண்டு பேர் பணத்தை ஒப்படைப்பதற்காக ஓலா வாகனத்தில் கார் புக் செய்து குர்கிராம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கார் சுரங்க பாதை நோக்கி சென்றபோது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் சுற்றி வளைத்தனர். பின்னர் தங்களிடமிருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் எடுத்து சென்றவர்களிடமிருந்து அந்த பையை பறித்து சென்றனர். இது கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 1.5 கிமீ தூரம் கொண்டதாக பிரகதி மைதான் சுரங்க பாதை உள்ளது. இந்த பாதை டெல்லியின் பல்வேறு பகுதிகளை இணைக்கிறது. டெல்லி பட்டியாலா நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இந்த சுரங்க பாதை வழியாகதான் செல்ல வேண்டும். நொடி பொழுதில் சினிமா பாணியில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்த நிலையில், டெல்லியில் அதிகரித்து வரும் குற்றசம்பவங்களை தடுக்க முயற்சிக்காமல் இருந்து வரும் துணை ஆளுநர் முதலமைச்சர் விகே சக்சேனா பதவி விலக வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.