தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Theni: ப்ள்ஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் இல்லை! மாணவன் தற்கொலை - கம்பத்தில் அதிர்ச்சி சம்பவம்

Theni: ப்ள்ஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் இல்லை! மாணவன் தற்கொலை - கம்பத்தில் அதிர்ச்சி சம்பவம்

May 10, 2024, 06:20 PM IST

  • தேனி மாவட்டம் கம்பத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் மதிப்பெண் குறைவு என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயவர்மன் (17) இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து மாணவன் வீட்டில் தனியாக இருந்தபோது மூன்றாவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். வெகு நேரமாக வீட்டில் ஆள் இல்லாததால் உறவினர்கள் மாணவனை தேடிப் பார்த்த பொழுது மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்து மாணவனை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.