தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Odisha Train Accident: மனித தவறால் நிகழ்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து - பதைபதைக்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்

Odisha Train Accident: மனித தவறால் நிகழ்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து - பதைபதைக்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்

Jun 03, 2023, 07:55 PM IST

  • ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளர். இந்த கோர விபத்துக்கு பின்னணியில் மனித தவறு இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சிக்னலிங் கட்டுப்பாட்டு அறையின் விடியோவில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மெயின் லைனுக்குப் பதிலாக சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி, மெயின் லைனில் தடம் புரண்டது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தின் போது மணிக்கு 127 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சரக்கு ரயில் மீது மோதிய சில நிமிடங்களில், எதிரே வந்த ஹவுரா நோக்கி சென்ற யஷ்வந்த் நகர் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மூலம் மேலும் பல உண்மைகள் தெரியவரும். இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. தவறான பாதையில் ரயில் சென்றதன் காரணமாகவே இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக உயர் மட்ட குழு அமைத்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.