Coonoor: பள்ளி வளாகத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டர்.. சூட்கேஸில் வந்தது என்ன?
Apr 04, 2024, 05:49 PM IST
Coonoor: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று காலை குன்னூர் மவுண்ட் ரோட்டில் உள்ள சென் ஜோசப் பள்ளி வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் ஒன்று தர இறங்கியது. இதனை பொதுமக்களில் சிலர் ஆச்சிரியத்துடனும் சிலர் சந்தேகத்துடனும் பார்த்தனர் தேர்தல் நேரம் என்பதால் தரை வழியில் வரும் வாகனங்களை மட்டும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர் இதனால் வான்வெளியில் பணம் வருகிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது. இந்நிலையில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய தனியார் பள்ளிக்கு தேர்தல் பறக்கும் படையினர் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் இதில் ஹெலிகாப்டரில் வந்தவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தின் உறவினர்கள் என்பதும் அவர்கள் சூட்கேசில் அவர்களது உடமைகளான துணிகள் மட்டுமே இருந்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி தெரிவித்தார் தேர்தல் சமயத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியது பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுகின்றது.