தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Neeraj Chopra: என்னது நீரஜ் சோப்ராவை ஏமாற்ற முயற்சித்ததா சீனா? முதல் Throwவை அளவீடு செய்யாததால் எழுந்த சர்ச்சை

Neeraj Chopra: என்னது நீரஜ் சோப்ராவை ஏமாற்ற முயற்சித்ததா சீனா? முதல் Throwவை அளவீடு செய்யாததால் எழுந்த சர்ச்சை

Oct 06, 2023, 11:00 PM IST

  • ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளார். இவரது ஆட்டத்தில் முதல் வாய்ப்பில் நீரஜ் சோப்ரை ஈட்டி எறிந்த தூரத்தை அளவீடு செய்யாமல் போனது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற இந்த ஆசிய விளையாட்டு நிகழ்வில் இப்படியொரு சம்பவம் அரங்கேறியிருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது. நீரஜ் சோப்ரா வீசிய முதல் வாய்ப்புக்கான ஈட்டி எறிதலுக்கு பின் அவர் எறிந்த தூரத்தை அளக்கவில்லை எனவும், ஆசிய விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் அதற்கான காரணமும் விளக்கமும் அளிக்கவில்லை. மாறாக அவரை மீண்டும் முதல் முயற்சிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டாலும் இந்த முடிவு புதிராகவே இருந்ததாக நீரஜ் சோப்ரா தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தடகள கூட்டமைப்பின் மூத்த துணை தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ், சீனா இந்தியாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்திருப்பதாக கூறியுள்ளார். அக்டோபர் 4ஆம் தேதி நிகழ்ந்த ஈட்டி எறிதல் நிகழ்வில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். என்னதான் அவர் பதக்கம் வென்றிருந்தாலும் அவரது வீச்சை அளவீடு செய்யாமல் ஏமாற்றியிருக்கும் விவகாரத்தால், நீரஜ் சோப்ராவின் சாதனை கூட மிஸ் ஆகியிருக்கலாம் என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன் அவர் முதல் முயற்சியிலேயே நல்ல புள்ளிகளை பெற்றிருக்கலாம் எனவும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.