Chandrayaan 3 Pics: சந்திரயான் 3 எடுத்த பூமி மற்றும் நிலவின் புகைப்படத்தை பகிர்ந்த இஸ்ரோ
Aug 10, 2023, 10:22 PM IST
- சந்திரயான் 3 விண்கலம் தனது பயணத்தில் நிலவு மற்றும் பூமியின் நம்பமுடியாத அளவிலான அற்புதமான புகைப்படங்களை படம் பிடித்துள்ளது. பூமியின் புகைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி எடுக்கப்பட்டது எனவும், நிலவின் புகைப்படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்தபோது எடுக்கப்பட்டது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் மூன்றாவது நிலவுக்கான பயணமாக அமைந்திருக்கும் சந்திரயான் 3 மிஷன் விண்ணில் ஏவப்பட்ட நாளான ஜூலை 14ஆம் தேதியில் லேண்டரால் எடுக்கப்பட்ட பூமி பரப்பின் புகைப்படமும், ஆகஸ்ட் 6ஆம் தேதி லேண்டரின் கிடைமட்ட கேமராவால் கிளிக் செய்யப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த கேமராக்களை அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையம், பெங்களூருவில் உள்ள மின்-ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வகம் இணைந்து உருவாக்கியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் நிலவின் புகைப்படம் அங்கிருக்கும் பள்ளங்களை தெளிவாக படம்பிடித்துள்ளது. சந்தியான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்கு நுழைந்த மறுநாளில் மேற்கூறிய புகைப்படங்களை எடுத்துள்ளது. நிலவின் தரைமட்டத்தை நோக்கி செல்லும் விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிரங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவின் தரைமட்டத்தில் இருந்து 1437 கிமீ வெளியே உள்ளது சந்தியான் 3.C