Chandrayaan 3: நிலவின் பரப்புக்கு மிகவும் அருகில் சென்ற சந்திரயான் 3
Aug 16, 2023, 06:53 PM IST
- நிலவுக்கு மிக அருகில் சென்றிருக்கும் சந்திரயான் 3 முக்கியமான பணியை நிறைவுசெய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரனை நோக்கிய பயணத்தில் அனைத்து விதமான இடர்பாடுகளையும் சந்திரயான் 3 கடந்து விட்டதாகவும், தற்போது சந்திரனைச் சுற்றி 153 கிமீ x 163 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. நாளை அதன் லேண்டர் தொகுதி உந்துவிசை பகுதியில் இருந்து பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலவுக்கான கனவு பயணமான சந்திரயான் 3, நிலவின் மேற்பரப்புக்கு நெருக்கமாக சென்றுள்ளது. தற்போது நிலவின் மேற்பரப்பிலிருந்து 163 கிமீ தொலைவில் உள்ளது. இந்தியாவின் மைல்கல் சாதனையாக இது அமைந்துள்ளது.