தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Karti Mp Speech: ‘கார்த்தி சிதம்பரம் பேசிய அந்த வார்த்தை.. வெகுண்டெழுந்த பாஜகவினர்’ காரைக்குடியில் பரபரப்பு!

Karti MP Speech: ‘கார்த்தி சிதம்பரம் பேசிய அந்த வார்த்தை.. வெகுண்டெழுந்த பாஜகவினர்’ காரைக்குடியில் பரபரப்பு!

Feb 27, 2024, 08:45 AM IST

  • இந்தியா முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பில், 554 ரயில் நிலையங்களை மறு சீரமைத்தல் மற்றும் ஆயிரத்து 500 சாலை மேம்பாலம் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இந்நிலையில் திங்கள் கிழமை காலை 11 மணி அளவில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் சந்திப்பு நிலையத்தில் 13 கோடியே 91 லட்சம் மதிப்பில் மறு சீரமைப்பு பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், கார்த்தி சிதம்பரம் எம்.பி., தொகுதி எம்.எல்.ஏ மாங்குடி கலந்து கொண்டனர். தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் எம்.பி பேசும்போது தமிழகத்தின் இருந்து நாம் ரூ.1 வரி கட்டினால், 29 காசு தான் வருகிறது. ஆனால், உத்திர பிரதேசத்தில் ரூ.1 கட்டினால் ரூ.2.73 திரும்ப கிடைக்கிறது. என்றும் இரயில்வே திட்டங்கள் குறித்து பேச இரயில்வே போர்டு தான் முடிவு செய்யும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர் என்று பேசினார். இதனால், ஆத்திரமடைந்த பாஜ., வினர் எழுந்து மத்திய அரசை விமர்ச்சித்து கார்த்தி சிதம்பரம் எம்பி மேடையில் தொடர்ந்து பேசக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு இருந்த காங்கிரஸ் தொண்டர்களும் பதிலுக்கு எதிர் கோஷமிட்டனர். இதனால் கார்த்தி எம்.பி., தனது பேச்சை முடித்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பினார். பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எழுப்பிய கூச்சல் வாக்கு வாதம் செய்த நிகழ்வு நிகழ்ச்சிக்கு வந்திருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.