Bharat Nyay Yatra: 'பாரத் நியாய் யாத்திரையில்' I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்களா?'
Dec 27, 2023, 07:02 PM IST
- 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'மணிப்பூரில் இருந்து மும்பை வரை' பாரத் நியாய் யாத்திரையை வரும் ஜனவரி 14ஆம் தேதி தொடங்குகிறார். இந்த யாத்திரையானது அசாம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து 6,200 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த யாத்திரை ஆனது 2024ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று மும்பையில் முடிவடைகிறது. இந்த யாத்திரை குறித்த அறிவிப்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை மிகப் பெரிய வெற்றியடைந்தது என காங்கிரஸ் கூறியுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் சட்டசபைத் தேர்தலில் கிடைத்த தோல்வியை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், 2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு ராகுல் காந்தியின் அடுத்த யாத்திரை திட்டம் வந்துள்ளது. இந்த யாத்திரையில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கமும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆளும் பீகாரும் ராகுலின் யாத்திரையில் இம்முறை வருகிறது. மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த யோசனையை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் வழிமொழிந்துள்ளார். இதனால், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, நியாய் யாத்திரையை பாஜக விமர்சித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களுக்கு நியாயம் கிடைத்து வருவதாகவும், நியாயம் என்பதை ஸ்லோகனாக போடக்கூடாது. அதை கிடைக்கச் செய்வதில் தான் இருக்கிறது என்றும் பாஜக மூத்த தலைவர் நளின் கோலி தெரிவித்தார்.