தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Terrorist Attack: ஜம்மு காஷ்மீர் ராஜோரியில் தீவிரவாத தாக்குதல்! ராணுவ வீரர்கள் 5 பேர் பலி

Terrorist Attack: ஜம்மு காஷ்மீர் ராஜோரியில் தீவிரவாத தாக்குதல்! ராணுவ வீரர்கள் 5 பேர் பலி

Dec 22, 2023, 10:36 PM IST

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி-பூஞ்ச் பகுதியில் திடீர் தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் டிசம்பர் 21ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடந்துள்ளது. முதலில் மூன்று ராணுவ வீரர்கள் இறந்ததாகவும், மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் இருவர் என உயர்ந்தது. தீவிரவாதிகள் இரண்டு ராணுவ வீரர்களின் உடலை சிதைத்தாக பிடிஐ நிறுவனம் தெரிவித்திருக்கும் நிலையில், இந்த தகவலை இந்திய ராணுவம் உறுதிபடுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி அல்லது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பிராக்ஸி இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. ரத்த வெள்ளத்துடன் புகைப்படங்கள், விடியோக்கள் வெளியாகி மனதை பதைபதைக்க வைத்துள்ளன. ராணுவத்தினரின் உடைபட்ட ஹெல்மெட், வாகனங்களின் விண்ட்ஸ்கிரீன் உடைக்கப்பட்டிருப்பது அதில் தெளிவாக தெரிகிறது. தீவிரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் தீவிர மோதலில் ஈடுபட்ட போதிலும், வீரர்களின் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் தப்பி சென்றிருக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 2021 முதல் ராஜோரி பகுதியில் மட்டும் 12க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தீவிரவாத தாக்குதல் நடைபெறும் ராஜோரி, பூஞ்ச் பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ளது.