இஸ்ரேல் - பாலஸ்தீனர்கள் இடையே கடும் தாக்குதல்! அதிர வைக்கும் நேரடி காட்சிகள்
Apr 06, 2023, 06:06 PM IST
- ஜெருசலேம் நகரில் அமைந்துள்ள அல்-அக்ஸா என்கிற மசூதியில் இஸ்ரேல் போலீசார் - பாலிஸ்தீனர்களிடையே கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அல்-அக்ஸாவில் உள்ள இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாலஸ்தீன தீவிரவாதிகள் காஸா பகுதியில் ராக்கெட் குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பதில் தாக்குதலாக இஸ்ரேலிய ராணுவத்தினரும் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலின் நேரடி விடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளன. முன்னதாக, அல்-அக்ஸாவ மசூதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டகாரர்கள் அப்புறப்படுத்துவதற்கு இஸ்ரேல் போலீசார் அங்கு குவிந்தனர். ஆனால் போராட்டகாரர்கள் பட்டாசுகள் வெடித்தும், குச்சிகளால் விரட்டியும், கற்கள் வீசியும் தங்களை தற்காத்து கொண்டனர். இசுலாமியர்களின் புனித மாதமான ரம்லான் மாதத்தை முன்னிட்டு இசுலாமியர்கள் உண்ணா நோன்பு இருந்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்து வரும் யூதர்களும் பாஸ்ஓவர் கொண்டாட்டத்துக்கு தயாராகி வரும் இந்த இந்த நேரத்தில் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் விடியோவை இஸ்ரேல் போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய போலீசார் மீது பட்டாசுகள், கற்கள் வீசப்பட்ட காட்சிகள் அதில் இடம்பிடித்துள்ளன. இந்த தாக்குதல் நடைபெற்ற அல்-அக்ஸா மசூதி, யூதர்களின் புனித தளமான டெம்பிள் மவுண்ட்க்கு மேற்பகுதியில் அமைந்துள்ளது. இந்த சம்பவத்தில் இளைஞர்கள் பலரும் சட்டத்தை மீறி வன்முறையில் ஈடுபட முயன்றதன் காரணமாகவே மசூதிக்குள் செல்லி நேரிட்டதாக இஸ்ரேல் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் வடக்கு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் பிரதேசங்களில் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. ஐந்து ராக்கெட்டுகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை இடைமறித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் நான்கு ராக்கெட்டுகள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காஸா பகுதியில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. காஸா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் என்கிற இசுலாமிய அமைப்பு இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.