தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Yogi Ramsuratkumar:யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

Yogi Ramsuratkumar:யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

Karthikeyan S HT Tamil

Dec 02, 2022, 01:23 PM IST

google News
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் யோகி ராம்சுரத்குமார் சுவாமியின் 104வது ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகவான் ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் எனப் பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி திருவண்ணாமலை. காசியில் இருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி பக்தர்களுக்கு வழிகாட்டிய சித்த புருஷர் விசிறி சாமியார் என்றும் காசி மகான் என்றும் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார். இன்று (டிச.01) அந்த மகானின் 104வது ஜெயந்தி தினம்.

திருவண்ணாமலையில் உள்ள யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஆசிரமத்தில், அவரது ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதேபோல், அவரது பக்தர்களால் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் யோகியின் ஜெயந்தி விழா நடைபெற்றது.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள யோகிராம் சுரத்குமார் நாமகேந்திரத்தில் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் 104வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

யோகி ராம்சுரத்குமாரின் 104வது ஜெயந்தி விழா

காலை 7:35 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 9.30 மணிக்கு நெல்லை செந்தில் ஆறுமுகம் ஓதுவார் குழுவினரின் திருப்புகழ் தேவாரம் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து 10:30 மணிக்கு பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நாம வேள்வியும், பகல் 12:30 மணிக்கு தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி