தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tindivanam Tahsildar: யாகம் நடத்திய பின் பணிகளை துவங்கிய புதிய தாசில்தார்!

Tindivanam Tahsildar: யாகம் நடத்திய பின் பணிகளை துவங்கிய புதிய தாசில்தார்!

Karthikeyan S HT Tamil

Apr 22, 2023, 06:55 AM IST

google News
திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் யாகம் நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் யாகம் நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் யாகம் நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனம் தாசில்தாராக பணிபுரிந்தவர் விபத்தில் பலியானதை தொடர்ந்து, புதிய தாசில்தார் அலுவலகத்தில் யாகம் நடத்திய பின் பணிகளை மேற்கொண்டது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாசில்தாராக பணிபுரிந்தவர் வெங்கட சுப்ரமணியன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வந்தவாசி அருகே எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக வெங்கட சுப்ரமணியன் உயிரிழந்தார். இதனை அடுத்து மேல்மலையனூரில் பணியாற்றி வந்த தாசில்தார் அலெக்சாண்டர் திண்டிவனம் தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட தாசில்தார் அலெக்சாண்டர் கடந்த 18 ஆம் தேதி ஜக்காம்பேட்டை உதவி ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து திண்டிவனம் நேரு வீதியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்தார். 

தாசில்தார் அறையில் அதிகாலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, சிறப்பு யாகம் நடந்தது. தாசில்தார் வாகனத்திற்கு மாலை அணிவித்து, அலுவலக வாசலில் பூசணிக்காய் உடைத்தனர். அதன் பின்னரே புதிய தாசில்தார் பணிகளை மேற்கொண்டார். இதுகுறித்து தாலுகா அலுவலக ஊழியர்கள் கூறுகையில், "பழைய தாசில்தார் விபத்தில் உயிரிழந்ததால், அந்த அறையில் திருஷ்டி கழிக்கவும், மன திருப்திக்காகவும் இந்த சிறப்பு யாகம் நடத்தினோம்" என்றனர்.

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த நடைமுறைகளை பின்பற்றக் கூடாது என்று தமிழக அரசாணை இருக்கும் நிலையில், இது போன்ற யாகம் நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி