தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: உல்லாசமா இருக்கலாம் வா.. கள்ளக்காதலனிடம் ஆசையாய் சென்ற பெண்.. கூட்டுப் பாலியல் செய்து கொலை!

Crime: உல்லாசமா இருக்கலாம் வா.. கள்ளக்காதலனிடம் ஆசையாய் சென்ற பெண்.. கூட்டுப் பாலியல் செய்து கொலை!

Jul 11, 2023, 01:53 PM IST

google News
கிருஷ்ணகிரியில் பெண்ணை உல்லாசமாக இருக்க அழைத்து கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் பெண்ணை உல்லாசமாக இருக்க அழைத்து கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் பெண்ணை உல்லாசமாக இருக்க அழைத்து கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உல்லாசமாக இருக்கலாம் வா.. கள்ளக்காதலனிடம் ஆசையாய் சென்ற பெண்.. கூட்டுப் பாலியல் செய்து கொலை!

கிருஷ்ணகிரியில் பெண்ணை உல்லாசமாக இருக்க அழைத்து கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் வழக்கில் திடீர் திருப்பமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். 40 வயதான இவருடைய மனைவி அம்பிகா மூன்று மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று காலை நேரத்தில் வீட்டின் அருகே சேலையால் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அம்பிகா கடந்துள்ளார்.

இதுகுறித்து பர்கூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வந்துள்ளனர். விசாரணையின் போது அம்பிகாவின் செல்போனை காவல்துறையினர் சோதனை செய்து பார்த்துள்ளனர். அதனை வைத்துத் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ஏழுமலை என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து அம்பிகாவை நாங்கள் தான் கொலை செய்தோம் என ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து மூன்று பேரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏழுமலைக்கும், அம்பிகாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பணப்பரிவர்த்தனை சிக்கல் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்பிகாவை ஏழுமலை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி கடந்த ஜூலை நான்காம் தேதி அன்று உல்லாசமாக இருப்பதற்காக அம்பிகாவை ஏழுமலை போன் செய்து அழைத்துள்ளார். அதை நம்பி வீட்டில் இருந்து அம்பிகா வெளியே வந்துள்ளார். பின்னர் ஏழுமலையும் அவரது நண்பர்களான 23 வயது கோவிந்தசாமி, 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் அம்பிகாவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அவரது புடவையை வைத்தே அவரது கழுத்தை நிறுத்து கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது இது குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி