Vedasandur Crime: கள்ளக்காதல் மோகம்..கூலிப்படையை ஏவி கணவரை ஸ்கெட்ச் போட்டு கொல்ல முயன்ற மனைவி - நடந்தது என்ன?
May 21, 2024, 01:54 PM IST
Vedasandur Crime: வேடசந்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Vedasandur Crime: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் வேடசந்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டி சேர்ந்தவர் பாரிச்சாமி. இவருக்கு திருமணமாகி பரிமளா என்ற மனைவியும் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் மதுரை அருகே உள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
வெளிநாட்டில் கள்ளக்காதலன்
ரமேஷ் அபுதாபியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது அடிக்கடி கோழிப்பண்ணைக்கு சென்று வந்துள்ளார். அப்போது ரமேசுக்கும் பாரிசாமியின் மனைவி பரிமளாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனை அறிந்த பாரிச்சாமி அவர்களை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் பழக்கத்தை கைவிடாததால், பாரிச்சாமி வேலையை விட்டுவிட்டு வேடசந்தூர் அருகே உள்ள பெரியபட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார்.
மேலும் தனது குடும்பத்தினரையும் வேடசந்தூருக்கு அழைத்து வந்தார். இது குறித்து பரிமளா வெளிநாட்டில் இருந்த ரமேசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கணவரை தீர்த்துகட்ட போட்ட பிளான்
மேலும் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட வேண்டும் என்றும் பரிமளா ரமேசிடம் கூறியுள்ளார். தான் வெளிநாட்டில் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு செலவுக்கு பணம் கொடுத்து விடுவதாகும் ரமேஷ் கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து பரிமளா மதுரையைச் சேர்ந்த குமார் என்பவரிடம் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் தருவதாக கூறி கூலிப்படையை ஏற்பாடு செய்தார். அதன்படி கடந்த 12ஆம் தேதி இரவு கோழிப் பண்ணைக்குள் புகுந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் கோழிப்பண்ணையில் மின்சாரத்தை துண்டித்து பாரிச்சாமியை கத்தி, அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த பாரிச்சாமியை அவரது குடும்பத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீஸ் விசாரணை
பாரிச்சாமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாரிச்சாமியின் மனைவி பரிமளா கூலிப்படையை வைத்து கணவரை கொல்ல முயன்றது தெரியவந்தது.
மூன்று பேர் கைது
இதனையடுத்து பரிமளா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த பெரியையன் என்ற குமார் (36) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.