தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பட்டியலின மாணவர்களுக்கு திறன் பயிற்சி – விவரங்கள் உள்ளே…

பட்டியலின மாணவர்களுக்கு திறன் பயிற்சி – விவரங்கள் உள்ளே…

Priyadarshini R HT Tamil

Mar 28, 2023, 02:10 PM IST

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் பட்டியல் இன மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற உதவும் திறன் பயிற்சிகள் அரசின் சார்பில் வழங்கப்படவுள்ளன.
பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் பட்டியல் இன மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற உதவும் திறன் பயிற்சிகள் அரசின் சார்பில் வழங்கப்படவுள்ளன.

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் பட்டியல் இன மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற உதவும் திறன் பயிற்சிகள் அரசின் சார்பில் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: கல்லூரிகளில் இறுதியாண்டு இளநிலை, முதுநிலை பயிலும் பட்டியலினத்தைச் சேர்நத மாணவர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பை பெறுவதற்கான தகுதித்தேர்வுகளை எதிர்கொள்ள மொழி திறன், திறனறிவு தேர்வுகள், குழு விவாதம் ஆகியவை குறித்த பயிற்சிகள் தேவைப்படுகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

இதைக் கருத்தில் கொண்டு அந்த மாணவர்களுக்கு 'ஆம்ப்கேட்' (அஸ்பயரிங் மைன்ட்ஸ் கம்ப்யூட்டர் அடாப்டபிளிட்டி) பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் திறன் பயிற்சிகள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் வழங்கப்படவுள்ளது.

எனவே, பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு இளநிலை, முதுநிலை பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 'ஆம்ப்கேட் பயிற்சியில் சேர சாதிச்சான்று, ஆதார் அட்டை, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் கடைசியாக நடைபெற்ற பருவத் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் ‘ஆம்ப்கேட் டிரெயினிங்' என்ற பயிற்சி பிரிவில் பதிவு செய்து, குறிப்பிட்ட ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு அனைத்து கல்லூரி முதல்வர்களும் தங்களது மாணவர்களுக்கு உதவ வேண்டும்.

மேலும், பதிவு செய்த மாணவர்களின் விவரங்களை socdcdote@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுடைய மாணவர்க இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் தாட்கோ மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அதுகுறித்த விவரங்களும் அந்த தாட்கோ இணையதளத்தில் உள்ளது. எனவே மாணவர்கள் அந்த இணையதளத்திற்கு அடிக்கடி சென்று பார்க்க வேண்டும். அதில் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும். மாணவர்கள் அவற்றை பார்த்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

டாபிக்ஸ்