தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை.. தமிழகத்தில் இன்று எந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Weather Update: வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை.. தமிழகத்தில் இன்று எந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Jun 25, 2024, 08:21 AM IST

google News
Weather Update : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய துவங்கி உள்து. கடலோர மற்றும் உள் மாவட்டங்களை பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Weather Update : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய துவங்கி உள்து. கடலோர மற்றும் உள் மாவட்டங்களை பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Weather Update : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய துவங்கி உள்து. கடலோர மற்றும் உள் மாவட்டங்களை பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Weather Update : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய துவங்கி உள்து. கடலோர மற்றும் உள் மாவட்டங்களை பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க

இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக நீலகிரி கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.  திருப்பூர் தேனி திண்டுக்கல் தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம் 

சென்னையை பொருத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இது போல் வரும் 28ஆம் தேதி மன்னர் வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள தென் தமிழக கடலூரப் பகுதிகள் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இதனுடைய 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசு தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 55 மீட்டர் வேகத்தில் வீசப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 25.06.2024 மற்றும் 26.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

27.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.06.2024 முதல் 30.06.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய அறிவிப்பு:

24.06.2024 முதல் 28.06.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில், 2 - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

24.06.2024 முதல் 28.06.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.06.2024 முதல் 26.06.2024 வரை: தென்மேற்கு அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27.06.2024 மற்றும் 28.06.2024: தென்மேற்கு அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

24.06.2024 முதல் 28.06.2024 வரை: தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி