Weather Update : உஷார் மக்களே.. தமிழகத்தின் எந்த பகுதியில் மழை பாருங்க.. உங்கள் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறையா!
Jul 22, 2024, 08:27 AM IST
Weather Update : "தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Weather Update : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி விருதுநகர் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஜூலை 23 முதல் 27 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி விருதுநகர் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் மழை காரணமாக நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, குன்னூர் ஆகிய தாலுகாவில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் சென்னை நகரில் ஒரு சில பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாகவும் இருக்கக்கூடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
21.07.2024 முதல் 24.07.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
21.07.2024 முதல் 23.07.2024 வரை: வடக்கு, மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24.07.2024: வடக்கு, மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
20.07.2024 மற்றும் 21.07.2024: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கேரள - கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22.07.2024 முதல் 24.07.2024 வரை: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9