Weather Update: நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..சென்னை நிலவரம் என்ன?-லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Jul 11, 2024, 03:46 PM IST
Weather Update: மேற்கு திசை காற்றின் வேகமாறு காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகின்றது. சென்னையில் பகலில் வெயிலும், மாலைக்கு மேல் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இன்று காலை முதலே சென்னை புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனும் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்தது. இந்த மழையால் ஓரளவுக்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறு காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்," மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 11) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.07.2024 மற்றும் 13.07.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14.07.2024 முதல் 17.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 - 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று (ஜூலை11) முதல் 15.07.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வெப்பநிலை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருமயத்தில் 9 செ.மீ மழையும், செங்குன்றம், ஆவடி, புழல், திருக்கழுக்குன்றம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் 7 செ.மீ மழையும், வல்லம் மற்றும் மகாபலிபுரத்தில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையம் பகுதியில் 39.7 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் ஈரோட்டில் 20 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்