தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update : ‘சென்னைக்கு மழை வாய்ப்பு’ இனி அந்தடுத்த நாட்கள் இப்படித்தான்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Weather Update : ‘சென்னைக்கு மழை வாய்ப்பு’ இனி அந்தடுத்த நாட்கள் இப்படித்தான்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Jun 16, 2024, 07:59 AM IST

google News
Weather Update : அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36ல் இருந்து 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
Weather Update : அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36ல் இருந்து 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

Weather Update : அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36ல் இருந்து 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

Weather Update : சென்னை மற்றும் பூற நகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, " மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 29ஆம் தேதி வரை சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசப்படும் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஆந்திர கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஓட்டியுள்ள வடக்கு வங்க கடல் பகுதிகள் அரபிக்கடல் பகுதிகளிலும் சூறைக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வெப்பநிலையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேசமயம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36ல் இருந்து 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மழை எச்சரிக்கை

15.06.2024 முதல் 19.06.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20.06.2024 மற்றும் 21.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்

15.06.2024 முதல் 19.06.2024 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.06.2024 மற்றும் 19.06.2024: தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

15.06.2024 முதல் 18:06:2024 வரை: அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.06.2024: அரபிக்கடலின் மத்திய பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா. | வடக்கு கேரளா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே SS கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி