தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Parliament Election 2024: ’திமுகவிடம் கூடுதல் எம்.பி. சீட்டுகளை கேட்போம்’ முதல்வரை சந்தித்த பின் கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

Parliament Election 2024: ’திமுகவிடம் கூடுதல் எம்.பி. சீட்டுகளை கேட்போம்’ முதல்வரை சந்தித்த பின் கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

Kathiravan V HT Tamil

Oct 08, 2023, 02:34 PM IST

google News
“9 ஆண்டுகாலம் பாஜக செய்துள்ள எல்லா துரோகத்திற்கும் அதிமுக உடன்பட்டு உள்ளது”
“9 ஆண்டுகாலம் பாஜக செய்துள்ள எல்லா துரோகத்திற்கும் அதிமுக உடன்பட்டு உள்ளது”

“9 ஆண்டுகாலம் பாஜக செய்துள்ள எல்லா துரோகத்திற்கும் அதிமுக உடன்பட்டு உள்ளது”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் மாநாடு நடத்த வலியுறுத்தினோம். பேசிவிட்டு தீர்மானிக்கலாம் என முதல்வர் கூறினார். மக்களின் அன்றாட பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் பேசினோம். டெல்டா பந்த் குறித்து விரிவாக பேசினோம். பரிசீலிப்பதாக முதலமைச்சர் கூறினார்.

கேள்வி:- ஆசிரியர்கள் பிரச்னைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசினீர்களா?

ஆசிரியர்கள் போராட்டத்தில் அரசு பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி சில தீர்வுகளை சொல்லி உள்ளனர். இது இன்றைக்கு வந்த பிரச்னை அல்ல 15 ஆண்டுகாலமாக உள்ள பிரச்னை. 10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத எல்லா பிரச்னைகளையும் தீர்வுகாண வரும்போது அரசுக்கு கூடுதலான சுமை ஏற்படும்.

கேள்வி:- சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் சொல்லி உள்ளோம்.

போராடக்கூடிய எல்லோருக்கும் எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆசிரியர்கள் கைது நல்ல விளைவை ஏற்படுத்தாது என்று சொன்னோம்.

கேள்வி:- கூட்டணியில் நீடிக்கிறீர்கள்? அதே 2 தொகுதியை எதிர்ப்பார்க்கிறீர்களா? அல்லது கூடுதலாக எதிர்ப்பார்க்கிறீர்களா?

கூட்டணி என்பது உறுதியாக உள்ளது. ஏற்கெனவே இருந்ததை அதிகப்படுத்ததான் எல்லோரும் முயற்சிப்பார்கள்.

கேள்வி:- அதிமுகவில் இருந்து அழைப்பு உள்ளதா?

அதிமுகவுடன் அழைப்பு இல்லை. அதிமுக-பாஜக பிரிந்தாலும் அதிமுக-பாஜக ஒன்றாக இருக்கும்போது எவ்வாறு எதிர்த்து போராடினோமோ அந்த போராட்டம் தொடரும். 9 ஆண்டுகாலம் பாஜக செய்துள்ள எல்லா துரோகத்திற்கும் அதிமுக உடன்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி