Vikravandi By Election : பரபரப்புக்கு மத்தியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
Jul 10, 2024, 08:58 AM IST
Vikravandi byelection : விக்ரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி உள்ளது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் காலையிலேயே வாக்கு சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தேர்தலை பதற்றமின்றி நடத்த துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளது.
விக்ரவாண்டி இடைத்தேர்தல் தொடங்கியது
விக்ரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர 110 வாக்கு சாவடிகளில் வெளிப்பகுதியிலும் வெக் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடையும். அதன் பின் வாக்கு பதிவு இயந்திரகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு உரிய பாதுகாப்புடன் வைக்கப்படும் நிலையில் வரும் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
சாலை மறியல்
இடைத்தேர்தல் நடைபெறும் கானை பகுதியில் வாக்கு சாவடி அருகே 100 மீட்டர் வரை உள் கடைகளை மூடச்சொன்னதால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
வேட்பாளர்கள் விபரம்
ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது. இதனால் திமுகவுக்கு போட்டியாக பாமக வேட்பாளர் சி.அன்பு மணி போட்டியிடுகிறார். நாம் தமிழகர் கட்சியின் வேட்பாளராக டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 பேர் களத்தில் உள்ளனர்.
பதற்றமான வாக்கு சாவடிகள்
தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 276 வாக்கு சாவடிகளில் 44 வாக்கு சாவடிகள் பதற்றமான என கண்டறியப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என 1355 பேர் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.
விக்ரவாண்டி எம்எல்ஏ மரணம்
முன்னதாக விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார்.
விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. அங்கிருந்து கிளை கழக செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் மாவட்ட பொருளாளர், மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2019 விக்ரவாண்டி இடைத்தேர்தலின் போது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அவருக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
இந்திய தேர்தல் ஆணையம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உயிரிழந்த நிலையில் இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி, ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பித்தது. வேட்புமனுவைத் தாக்கல் ஜூன் 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
மேலும், வேட்புமனுக்கள் மீது 24 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற 26 ஆம் தேதி கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஜூலை 10 தேதியான இன்று வாக்கு பதிவு நடைபெறு கிறது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்