Vikravandi By Election: 'மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து போட்டி.. அதிமுக காரணத்தை சொல்லட்டும்' வானதி சீனிவாசன் அதிரடி
Jun 16, 2024, 09:00 AM IST
Vikravandi By-Election : அதிமுக ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு அவர்களே காரணத்தை சொல்லட்டும். கடந்த 2026 தேர்தலில் எந்த கட்சி எப்படி ஓட்டு வாங்க போகிறது என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். ஒவ்வொருவரும் அவர்கள் எதிர்பார்ப்பை சொல்லிக் கொண்டிருக்கலாம்.
Vikravandi By Election: தமிழகத்தில் இடைத்தேர்தலை எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள் பணபலத்தையும் அதிகார பலத்தையும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதையும் மீறி மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது எனவும் பாஜக மகளிர் மீது தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது கூறியதாவது, தமிழகத்தின் இடைத்தேர்தல் என்பது எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள் பணபலத்தையும் அதிகார பலத்தையும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதையும் மீறி மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது என்றார்.
மேலும் அதிமுக ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு அவர்களே காரணத்தை சொல்லட்டும். கடந்த 2026 தேர்தலில் எந்த கட்சி எப்படி ஓட்டு வாங்க போகிறது என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். ஒவ்வொருவரும் அவர்கள் எதிர்பார்ப்பை சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வரக்கூடிய இரண்டு ஆண்டு காலம் மக்கள் பணி செய்து ஒரு வெற்றி முகமான கூட்டணியாக மாறப்போவதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் கூட்டணி வேட்பாளர் நிற்பதற்காக ஆதரவு கொடுத்து தேர்தலில் கடுமையாக பணியாற்ற போகிறோம் என்றும் தேர்தல் என்பது ஒவ்வொரு அரசுக்கும் கட்சிக்கும் மக்கள் எப்படி மதிப்பீடு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டுதான் என்றாலும் இந்த தேர்தலில் நாங்கள் தைரியமாக போட்டியிடுகிறோம் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதுதான் தகவல் என்று தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான காரணம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் (ஜூன் 14) இன்று தொடங்கியுள்ளது. வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், வேட்புமனுக்கள் மீது 24 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற 26 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதிமுக புறக்கணிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"அராஜகம் என்றால் திமுக; திமுக என்றால் அராஜகம்". திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். விடியா அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்