தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vijayadharani: ’என்ன விட ஜூனியர் அவரு!’ பாஜகவில் இணைந்தது பற்றி விஜயதாரணி பேட்டி!

Vijayadharani: ’என்ன விட ஜூனியர் அவரு!’ பாஜகவில் இணைந்தது பற்றி விஜயதாரணி பேட்டி!

Kathiravan V HT Tamil

Feb 24, 2024, 04:17 PM IST

google News
“மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை நல்ல முறையில் செய்துள்ளார். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எழுச்சி உள்ளது”
“மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை நல்ல முறையில் செய்துள்ளார். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எழுச்சி உள்ளது”

“மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை நல்ல முறையில் செய்துள்ளார். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எழுச்சி உள்ளது”

தமிழகத்தில் மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அவர் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது ஏன் என விஜயதாரணி எம்.எல்.ஏ விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் தலைமை பதவிகளுக்கு பெண்கள் வர முடியாத சூழல் நிலவுகிறது. மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்த நான் சட்டமன்ற முதன்மை கொறடாவாக நீண்டநாள் இருந்துவிட்டேன். சட்டமன்ற கட்சித் தலைவர் பொறுப்பை என்னைவிட ஜூனியருக்குதான் கொடுத்துள்ளனர். சென்ற முறை எம்.பி தேர்தலுக்கு நான் வாய்ப்பு கேட்டேன். 1999ஆம் ஆண்டு முதல் எம்.பி சீட்டு கேட்டேன். ஆனால் அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நிறைய பணிகள் நடைபெறாத சூழல் உள்ளது. எந்த பாராளுமன்ற உறுப்பினரும் செயல்படாத நிலை உள்ளது. ஏற்கெனவே இருந்தவர்களும் ஏதும் செய்யவில்லை.

மத்தியில் ஆளும் கட்சியுடன் இணையும் போது நிலுவையில் உள்ள பணிகளை செய்ய முடியும், மீனவர்கள் அடிக்கடி காங்கிரஸ் ஆட்சியில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் பாஜக ஆட்சி வந்த பிறகு மீனவர்கள் கொலை செய்யப்படுவது குறைந்துள்ளது. மீனவர் பிரச்னைக்கு தீர்வுகாண பாஜக எடுத்த முயற்சி மிகப்பெரியது. அகில இந்திய அளவில் ரேஷன் திட்டங்கள் எல்லா மாநிலங்களிலும் போய் சேர்ந்துள்ளது, தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் இந்த திட்டங்களை ஏற்க மறுக்கின்றனர்.

நாட்டை வழிநடத்த கூடிய தலைவராக மோடி ஜி உள்ளார். அவரது தலைமையின் கீழ் நாடு சிறப்பாக உள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் சட்டம், இசலாமிய பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இஸ்லாமிய பெண்கள் வாக்குகள் மொத்தமாக பாஜகவுக்கு கிடைக்கத்தான் வாய்ப்பு உள்ளது. மோடிஜி அவர்கள் தலைமையில் இந்தியா இயங்க வேண்டும் என்பதற்காக நான் பாஜகவில் இணைந்தேன். பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரும் கட்சியாக பாஜக உள்ளது.

மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை நல்ல முறையில் செய்துள்ளார். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எழுச்சி உள்ளது.

கட்சியில் எனது ராஜினாமாவை கொடுத்துள்ளேன். எல்லா பதவிகளில் இருந்தும் விலகி உள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டது குறித்த கேள்விக்கு கட்சித் தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் என கூறி உள்ளார். 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை