தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vengaivayal Case: வேங்கைவயல் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்! சொதப்பிய Dna சோதனை! அதிர்ச்சியில் சிபிசிஐடி!

Vengaivayal Case: வேங்கைவயல் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்! சொதப்பிய DNA சோதனை! அதிர்ச்சியில் சிபிசிஐடி!

Kathiravan V HT Tamil

Jan 23, 2024, 10:25 AM IST

google News
”Vengaivayal Case: இதனை அடுத்து 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரி உள்ளனர்”
”Vengaivayal Case: இதனை அடுத்து 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரி உள்ளனர்”

”Vengaivayal Case: இதனை அடுத்து 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரி உள்ளனர்”

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய நபர்களாக பார்க்கப்பட்டவர்களின் டி.என்.ஏ மாதிரிகள் ஏதும் ஒத்துப்போகவில்லை என தெரிய வந்ததுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கிடந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பின்னர் இந்த வழக்கானது தமிழ்நாடு காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வந்தது.  இதுவரை 221 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தி சாட்சியங்களை பெற்றனர். 

இதுமட்டுமின்றி வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் வேங்கைவயலில் கடந்த ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி நேரில் கள ஆய்வு செய்தார்.

அறிவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் நீதிமன்ற அனுமதி உடன் தடயவியல் ஆய்வுகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வந்தனர். தடயவியல் ஆய்வுகள் முடிவின்படி 31 பேரின் டி.என்.ஏ மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் 31 பேரின் டி.என்.ஏ மாதிரிகளும் ஒத்துப்போகவில்லை என தெரிய வந்துள்ளது.  

இதனை அடுத்து 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரி உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி