தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vanathi Srinivasan : ‘கைது செய்து ஆத்திரத்தை குறைக்கிறாரா முதல்வர்?’ வானதி சீனிவாசன் கேள்வி!

Vanathi Srinivasan : ‘கைது செய்து ஆத்திரத்தை குறைக்கிறாரா முதல்வர்?’ வானதி சீனிவாசன் கேள்வி!

Divya Sekar HT Tamil

Jun 17, 2023, 06:23 PM IST

google News
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி. சூர்யா. இவர் தமிழக மாநில தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். எஸ்.ஜி. சூர்யா அண்ணாமலையுடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் கூட செய்துள்ளார். மேலும், பாஜக சார்பில் ஊடக விவதாங்களிலும் சூர்யா பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், மதுரையில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளர் உயிரிழந்தார் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கூறி மதுரை சைபர் கிரைம் போலீசார் நேற்று நள்ளிரவில் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர்.

தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார்.

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த தகவல் அறிந்த பாஜகவினர், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். சூர்யா கைதை கண்டித்து திடீரென பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் 2தனது டிவிட்டர் பக்கத்தில்,” தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது. மலக்குழி மரணங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை மாற்ற முயற்சிக்காத தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விமர்சனங்களுக்கு கைது என்பதன் மூலம் தனது ஆத்திரத்தை, கோபத்தை குறைக்கிறாரா??? வளர்ந்து வருகிறோம்; சட்டப்படி சந்திப்போம்” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்டுகளின் மோசமான இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியதுதான் அவரது ஒரே தவறு.விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது.

அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல் உண்மைக்காக எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்”என தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி