தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vaigai Dam Open: மதுரை குடிநீருக்காகத் திறக்கப்பட்ட வைகை அணை!

Vaigai Dam open: மதுரை குடிநீருக்காகத் திறக்கப்பட்ட வைகை அணை!

Sep 20, 2022, 01:18 AM IST

google News
மதுரை மாவட்ட குடிநீருக்காக வைகை அணையிலிருந்து 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட குடிநீருக்காக வைகை அணையிலிருந்து 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட குடிநீருக்காக வைகை அணையிலிருந்து 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து 1492 கன அடி நீர் வரத்து உள்ளது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் தொடர்ச்சியாகக் கன மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். கடந்த மாதம் 13ம் தேதி அன்று தென்மேற்கு பருவமழை காரணமாக 69 அடியை எட்டியது.

இதன் காரணமாகக் கடந்த ஜூன் மாதம் வைகை அணையிலிருந்து முதல் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் வைகை அணையிலிருந்து ஒவ்வொரு நீர் திறக்கப்பட்டது. எப்போதும் 69 அடியில் நிலை நிறுத்தப்படும் நீர் தற்போது முழு கொள்ளளவான 71 அடிவரையில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

தொடர்ச்சியாகத் தண்ணீர் திறக்கப்பட்ட போதும் அணையின் நீர்மட்டமானது 70.62 அடியாகவே இருந்தது. நேற்று வரை அணையிலிருந்து 2069 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டது. தற்போது மதுரை மாவட்ட குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி