V. O. Chidambaram Pillai: ஆறு வருடம் சிறை.. யார் இந்த வ. உ. சிதம்பரம்பிள்ளை
Sep 05, 2023, 04:45 AM IST
வழக்கறிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வ. உ. சிதம்பரம்பிள்ளை பிறந்ததினம் இன்று.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் 1872 செப்டம்பர் 6 ஆம் நாள் உலகநாதம்-பரமாயி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் சிதம்பரனார்.
இளமையில், பாளையங்கோட்டையிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்து, பிறகு சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்று, ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞராக ஆனார். அப்போது அவருடைய தந்தையும் வழக்கறிஞராக இருந்தார். சில வழக்குகளில் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் எதிர்த்து வழக்காடியுள்ளனர்.
வள்ளியம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார், சிதம்பரனார். ஆனால், மணமான ஐந்து ஆண்டுகளிலேயே வள்ளியம்மாள் மரணம் அடைந்தார். பிறகு மீனாட்சி என்ற பெண்ணை, சிதம்பரனாருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
பாண்டிய, சோழ மன்னர்கள் காலத்தில் தமிழர்கள், ஏழு கடலிலும் கப்பல்களைச் செலுத்தும் உரிமை கொண்டிருந்தனர். பிறகு, ஆங்கிலேயர் அந்த உரிமையைப் பறித்துக் கொண்டனர்.
அந்த எண்ணம் சிதம்பரனார் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது அதனால் விடுதலைப் போரில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது வீர முழக்கம் நாடு முழுவதும் பரவி, மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை மூட்டியது! திரள் திரளாக மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். வெள்ளையர் ஆளுமையின் ஆணிவேர், வெள்ளை இன வியாபாரிகளே என்பதை உணர்ந்த சிதம்பரனார், அவர்களுக்குப் போட்டியாக தானும் வணிவு கப்பல் கம்பெனியைத் துவங்க எண்ணினார். அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை 'பிரிட்டிஷ் இந்தியா நாவிகேஷன் கம்பெனி என்ற ஆங்கிலேய நிறுவனம் தடத்திக் கொண்டிருந்தது வஉசி 1906-ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் நிறுவனம்' என்ற பெயரி தூத்துக்குடியில் தொடங்கினார்.
துவக்கத்தில் உள்ளூர் வர்த்தகர்கள் சிவர் அவருக்குப் பண உதவி செய்தனர். பின்னர், இந்தியா முழுவதிலும் உள்ள வர்த்தகர்களின் ஆதரவும் அவருக்கும் கிடைத்தது.
எஸ்.எஸ். வாவோ, எஸ்.எஸ். காலியோ என்னும் இரண்டு கப்பல்களை வாங்கினார் சிதம்பரனார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.
வ.உ.சி.யின் சுதேசி நிறுவனத்தால் வெள்ளையரின் கப்பல் வர்த்தகம் இழப்புக்குள்ளாகியது. இதனால் கப்பல் கட்டணங்களைப் பற முற்பட்டனர். இறுதியில், பயணிகளை கட்டணமின்றி இலவசமாக ஏற்றிச் செல்லுவதாகவும் அறிவித்தனர். ஆனால், எவ்வனவு நாளைக்குத்தான் இலவச மாக அழைத்துச் செல்ல முடியும்? அதனால் சிதம்பரனாரைத் தங்கள் பக்கம் இழுக்க அவருக்குப் பெருந்தொகை அளிக்கக்கூட முயன்று பார்த்தனர். வடீசி அவர்களிடம் விலை போகவில்லை.
சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் தொடக்கம். பொருளாதாரத் துறையில் சுதந்திரம் பெற இந்தியா எடுக்கும் முதல் முயற்சி என்று வெள்ளை அதிகாரிகள் அச்சம் கொண்டனர். ஆகவே இதற்கு மூல காரணமாக இருக்கும் சிதம்பரனான சிறையில் அடைத்தனர்.
அவர் மீது ராஜ துரோகக் குற்றம் சுமத் தப்பட்டு வழக்கின் இறுதியில் (1908) சிதம் பரனாருக்கு ராஜ துரோகக் குற்றத்திற்காகவும் துணையாக இருந்ததற்காக சுப்பிரமணிய சிவாவுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை இருபதும் இருபதும் நாற்பது ஆண்டுகள்) ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. சிவாவுக்குப் பத்து ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.
சிதம்பரனாருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டதும் மக்கள் கதறி அழுதனர். அப்போது, இந்தியாவுக்கு அமைச்சராக இருந்த மர்லி என்பவர். 'இந்தக் தண்டனை நியாயமற்றது' என சொல்லி வாதமிட்டார்.
அப்போது, இந்தியாவுக்கு அமைச்சராக இருந்த மர்லி என்பவர். 'இந்தக் தண்டனை நியாயமற்றது' என்று குறிப்பிட்டார். பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்ததன் பயனாக தண்டனை பத்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. பின்னர், லண்டன் பிரிவு கவுன்சிலில் மேல் முறையீடு செய்ததால் ஆறு ஆண்டுகளாகத் தீர்ப்பானது.
சிறையில் இருந்து வெளியே வந்து சிதம்பரனார் மீண்டும் வழக்கறி தொழிலையே மேற்கொண்டார். இலக்கியப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அவரது மறைவுக்கு பிறகு தூத்துக்குடியில் அவர் பெயரில் வ.உ.சி. கல்லூரி திறக்கப்பட்டது.
டாபிக்ஸ்